Tamilnadu
“முதியோர் உதவித்தொகைக்கு கூட லஞ்சம்”: லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் பெரியாப்பிள்ளை என்பவர் பொதுமக்களிடம் லஞ்சம் வங்கிக்கொண்டு மட்டுமே பணியை செய்வதாக கூறப்பட்டுகிறது.
இதனையடுத்து பொதுமக்களிடம், முதியோர், விதவை உதவித்தொகை பெற்றுத்தர வாங்கிய லஞ்சப்பணத்தை திரும்ப வழங்கக்கோரியும், வீட்டுமனைபட்டா வழங்குவதாக கூறி பெற்ற லஞ்சப் பணத்தை திரும்ப வழங்கக்கோரியும் அவரை பணிநீக்கம் செய்யக்கோரியும் மக்கள் உரிமை, லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவையின் மாநிலத்தலைவர் இராமநாத அடிகளார் தலைமையில் எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற லஞ்சம் எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!