Tamilnadu
மிகமிக அதிகமான தண்டனையை அனுபவித்துவிட்டார்கள் -எழுவர் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக குடியரசுத்தலைவருக்கு மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் தங்களது வாழ்க்கையை கழித்து வரும் எழுவரின் துயர் பற்றி எடுத்துரைக்கவும் அவர்களது விடுதலைக்கு ஏற்பாடு செய்யவும் தங்களிடம் கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
இந்திய சட்ட அமைப்பின்படி வாழ்நாள் சிறை என்பதன் காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கும் மேலாகவே அனுபவித்தும் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கோரி வருகின்றன.
ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்களின் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் ஆளுநர் இவ்விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என்று கருத்து வெளியிட்டதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுத்து எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்; அந்த எழுவரும் மிக மிக அதிகமான தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்கிற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!