Tamilnadu

தினமும் நூறு நூறாக குறையும் கொரோனா பாதிப்பு... தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்! #CoronaUpates

புதிதாக 69 ஆயிரத்து 344 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு இன்று தொற்று பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் 695, கோவையில் 209, சேலத்தில் 146, செங்கல்பட்டில் 144, திருவள்ளூரில் 115, திருப்பூரில் 99 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக உயர்ந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் இதுவரையில் கொரோனாவில் இருந்து 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து, 27 ஆயிரத்து 734 பேருக்கு தற்போது கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆயினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மை நாட்களாக குறைந்து வந்தாலும் அரசு தரப்பில் வேண்டுமென்றே பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: காடா துணியிலான மாஸ்க் எப்படி கொரோனா கிருமியை தடுக்கும்? முகக்கவச டெண்டரில் முறைகேடு - திமுக MLA சாடல்!