Tamilnadu
“உயிரை பணயம் வைத்து செய்த வேலைக்கு சம்பளம் இல்லை” : அதிமுக அரசை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
உலகளவில் கொரோனா எனும் கொடிய வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கள் பணியைத் தொய்வில்லாமல் செய்து வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.
சேவை எண்ணத்துடன் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை “corona warriors” என்று அரசு கொண்டாடியது. மருத்துவர்களுக்கு அடுத்து நோய்க் கிருமிகளுடன் நேரடியாகப் போராடுவது இந்தத் தூய்மைப் பணியாளர்கள்தான்.
அதுமட்டுமல்லாது, தரமான முகக்கவசம், கையுறைகள் போன்றவை இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் பற்றியும் கொஞ்சமும் அக்கறை இல்லாத அரசாக எடப்பாடி அரசு செயல்படுவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், உதகை நகர்ப்புறத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தங்களுக்கு ஊதியம் வழங்காததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், இரண்டுமாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய மைசூர் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களின் நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து சாலை மறியலைக் கைவிட்டனர். இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் கிடைக்கும் வரை பணிக்குச் செல்வதில்லை எனவும் உடனடியாக தங்களுக்கு ஊதியம் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் தவறும்பட்சத்தில் 200 தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். எனவே கொரோனா காலத்தில் அத்தசமின்றி பணிக்கு வந்து வேலை செய்தவர்களுக்குச் சம்பளம் வழங்காமல் இருப்பது அரசின் அலச்சியத்தயே காட்டுகிறது.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்