Tamilnadu
தமிழகத்தில் டைனோசர் முட்டையா? : கடல் வாழ் நத்தைகளின் படிமங்கள் கண்டெடுப்பு!
அரியலூர் மாவட்டப் பகுதியில் இந்தியப் புவியியல் ஆய்வுத்துறைக்குத் தலைமை ஏற்ற முதல் இந்தியரான எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவர் 1940ம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்காவில் உள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் ஓடைப் படுகை ஒன்றில், 18 மீட்டர் நீளம் உள்ள கல்லாகிப் போன மரம் ஒன்றைக் கண்டுபிடித்தார்.
சாத்தனூர் அருகே சில மீட்டர் நீளமுள்ள கல்மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் சாத்தனூரிலுள்ள 18 மீட்டர் நீள கல்மரம்தான் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மிக நீளமான, ஆசியாவின் மிகப்பெரிய கல்மரப் படிமமாகும்.
பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடல் பகுதியாக இருந்ததற்கான ஆதாரமாக ஆலத்தூர் வட்டத்தில், சாத்தனூர் கிராமத்தில் கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு தொல்லியல் துறையினர் சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
குன்னம் கிராமத்தில் வெங்கட்டான் குளத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது அப்போது அம்மோனைட் எனப்படும் கடல் வாழ் நத்தைகளின் படிமங்கள் மற்றும் டைனோசர் முட்டை போன்ற படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 13 அடி கல்மரம் அந்தப் பாறையில் புதைந்து இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றது என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 4 மாதங்களில் 3 புதிய கல்மரங்கள் கிடைத்திருக்கும் நிலையில் நேற்று 4வதாக குன்னத்தில் மற்றுமொரு கல்மரப் படிவம் கண்டறியப்பட்டது அப்பகுதித் தொன்மையை அறுதியிட்டுக் காட்டிவருகிறது. இது தற்போது இந்திய புவியியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!