Tamilnadu

மாநில உரிமைகளை அடகுவைத்த எடப்பாடி... GST இழப்பீட்டுக்கு பதிலாக கடன் வாங்க சம்மதித்த அ.தி.மு.க அரசு!

ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்குப் பதிலாக ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் பெறலாம் என்கிற மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட மத்திய நிதித்துறை கடன் பெற அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழக அரசு 9,627 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்குப் பதிலாக மத்திய அரசு முன்வைத்த 2 திட்டங்களை ஏற்க பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனிடையே நேற்று மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிடுள்ளது. அதில், தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த 21 மாநிலங்கள் முன்வந்ததன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் பெற்றுக் கொள்வதற்கு மத்திய நிதித்துறை ஒப்புதல் வழங்கி இருப்பதாக செய்திக் குறிப்பு மூலம் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்கள் இதுவரை மத்திய அரசினுடைய இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில் தமிழக அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

Also Read: GST கூட்டம்: “முதுகெலும்பு இருந்தால் வாக்கெடுப்பு நடத்தக் கோரவும்” - ஜெயக்குமாருக்கு திமுக MLA அட்வைஸ்!