Tamilnadu
சிசிடிவி கேமரா பொருத்தியதற்காக அடித்து கொலை மிரட்டல் : அ.தி.மு.க பிரமுகர் மீது பெண் அதிர்ச்சிப் புகார்!
சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனாம்பாள். இவருக்கு துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நிலம் உள்ளது. அதன் அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கண்ணியப்பன் என்பவருடைய காலிமனை உள்ளது.
இந்நிலையில், மீனாம்பாள் தனது மனையினை கண்காணிப்பதற்காக, தனது நிளத்தின் அருகே உள்ள போக்குவரத்து சாலையில் கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளார். மேலும், காவலாளி ஒருவரையும் பணியில் அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில், கண்காணிப்பு கேமரா அமைத்ததால் ஆத்திரமடைந்த கண்ணியப்பன், கேமரா கேபிள்களை துண்டித்துவிட்டு காவலாளியான செல்வராஜியிடம் வாக்குவாதம் செய்து அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் மீனாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் கண்ணியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது தனக்கு நெஞ்சுவிலி ஏற்ப்பட்டுள்ளது என்று கூறி, காவல்நிலையத்திலேயே ஜாமின் பெற்று பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். போலிஸார் சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!