Tamilnadu
2 பெண் குழந்தைகளுக்கு 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை : நாமக்கல் அருகே 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்து உள்ளது அணைப்பாளையம் கிராமம். அங்கு வசித்துவரும் 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், கடந்த 6 மாத காலமாக அப்பகுதியில், உள்ள சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலிஸார் இன்று அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து 75 முதியவர் உட்பட 6 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவா, சண்முகம், முத்துசாமி, மணிகண்டன், சூர்யா, வரதராஜ் ஆகிய 7 பேரையும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!