Tamilnadu
வேளாண் மசோதா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மழுப்பிய விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு!
நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா மூலம் விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை கிடைக்குமா? பெரிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்தால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் இருக்குமா? என செய்தியாளர்களின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றிருக்கிறார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.
சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் மசோதா குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேளாண் துறை அமைச்சர், "தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சட்டம். விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே முதல்வர் ஆதரவு தெரிவித்தார் . தமிழக அரசு இதுகுறித்து சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள். பத்திரிகை துறை சார்ந்தவர்கள் சொன்னால் மட்டுமே நம்புவார்கள்" என அமைச்சர் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாவிற்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விளக்கம் தான் அளித்தார் என்று மழுப்பலான பதிலை மட்டுமே அமைச்சர் தெரிவித்தார். இந்த மசோதா மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கலுக்கு வழிவகை செய்யும் என்ற கேள்விக்கு அமைச்சர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், மத்திய அரசு கொண்டு வரக்கூடிய வேளாண் சட்டம் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் கூறினார்.
ஏற்கனவே மாநில அரசு செயல்படுத்தி வருவதாக இருந்தால் பின் ஏன் மத்திய அரசு மசோதாவை கடைபிடிக்க வேண்டும், இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலுக்கு தமிழக அரசு துணை போவதாக இல்லையா என்ற கேள்விக்கு வேளாண் துறை அமைச்சரும் செயலாளரும் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றிருக்கிறார்கள்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!