Tamilnadu

கள்ளத்தனமாக விற்கப்படும் உணவுப் பொருட்கள் - அனைத்து ரேசன் கடைகளிலும் சிசிடிவி பொறுத்தக்கோரி வழக்கு!

பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 32 ஆயிரத்து 722 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த அத்தியாவசிய உணவு பொருட்களை பெறவதற்கு ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது.

இதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கும் வகையில் மாதந்தோறும் 35 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோதுமையை பொறுத்தவரை 34 ஆயிரத்து 890 மெட்ரிக் டன் மெட்ரிக் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்று பரவுதல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து தரப்பு மக்களும் வேலைவாய்ப்பு இணைந்து இழந்து வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி பருப்பு எண்ணெய் கோதுமை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது.

ஆனால் பயனாளர்களுக்கு இது முழுமையாக சென்றடையவில்லை என்றும், குறிப்பாக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுமையான அளவில் வழங்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளது.

இதைத் தடுக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தி கண்கானிக்க உத்தரவிடக் கோரி சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Also Read: துப்புரவு பணியாளர்களுக்கு உதவி தொகை வழங்க கோரிய மனு : மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!