Tamilnadu

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் முறைகேடு : காவல்துறையை சேர்ந்தவர்களே முறைகேடுகளுக்கு காரணம் என புகார்!

கடந்த ஜனவரி மாதம் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்வர்கள், “ஜனவரி மாதம் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

இதனால், தேர்வு பணிக்கு காவல்துறையைச் சேர்ந்தவர்களே செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பல இடங்களில் அவர்களே முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். மேலும் வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் விவரங்கள் சமூக வலைதளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வெளியானது எப்படி” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பதாகவும், இதற்கிடையே அவசரம் அவசரமாக பணி நியமன பணிகள் நடந்து வருகின்றன என்றும் குற்றம்சாட்டிய அவர்கள், முறைகேடு தொடர்பாக தமிழக அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Also Read: “அரசு அதிகாரிகள் துணையுடன் ரூ.110 கோடி அளவில் கிசான் திட்டத்தில் முறைகேடு” - வேளாண் துறை செயலாளர் பேட்டி!