Tamilnadu
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “மூத்த பத்திரிகையாளரும், ஜூனியர் விகடன், தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியராகவும் இருந்த சுதாங்கன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும், வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘திசைகள்’ பத்திரிகையில் தனது பயணத்தைத் தொடங்கிய சுதாங்கன் அவர்கள் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஏறக்குறைய 42 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம் உள்ள அவரின் ‘தேதியில்லாத டைரி’ புத்தகம் படிக்கப் படிக்கத் தகவல் சுரங்கம் போன்றது.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுடன் திரைத்துறையில் பணியாற்றியவர்; நடித்தவர்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமானவர்; என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டியவர்.
மூத்த பத்திரிகையாளர் ஒருவரை - பத்திரிகையுலகம் இழந்திருப்பது பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகனுக்கும் - உறவினர்களுக்கும் - அவரோடு பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கும் - திரைத்துறையினருக்கும் - அவரின் கருத்துகளின் பால் ஈர்க்கப்பட்டிருந்த வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!