Tamilnadu
வருமான வரித்துறை வழக்கு : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டார். இதற்கு ஊதியமாக வழங்கும் 3 கோடியே 47 லட்சம் ரூபாயை தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தும்படி ரஹ்மான் கூறியுள்ளார்.
இதன் மூலம் வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ரஹ்மான் முயற்சித்ததாக கூறி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணையில், ரஹ்மான் தரப்பு விளக்கத்தை ஏற்று, விசாரணையை கைவிட்டு முதன்மை ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை வருமான வரித் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது. கடந்த 2019 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Also Read
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு!” : சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு!
-
பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்! - கனிமொழி கண்டனம்!