Tamilnadu
அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
செப்டம்பர் 08 முதல் 10 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 09 முதல் 12 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 08 முதல் 12 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு :
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 09.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் 2.0 முதல் 4.0 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
Also Read
-
“பா.ஜ.க.வின் இன்னொரு கிளை தான் த.வெ.க ; முதல்முறையாக உண்மையை சொன்ன விஜய்” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்குவது மக்கள் விரோத முடிவு : பெ.சண்முகம் கண்டனம்!
-
தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!