Tamilnadu
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: செப். 22 முதல் நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
மேலும் அரியர் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியது. இதனால் அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், இறுதி செமஸ்டர் தேர்வு வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடைபெறும்.
கணினி அல்லது ஸ்மார்ட் போனில் கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் இணையதள வசதி இருக்கவேண்டும். விடையைத் தேர்வு செய்யும் வகையில் (Multiple Choice Questions) தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்