Tamilnadu
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் தீ விபத்து : 3 பேருந்துகள் நாசம் - போராடி அணைத்த தீயணைப்புத்துறை!
கொரோனா ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து தடை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில், அருகிலிருந்து ஆம்னி பேருந்துகளுக்கும் தீ பரவியது.
தீ பிடிப்பதை கண்ட பாதுகாப்பு ஊழியர் தீயணைப்பான் மூலம் அணைக்க முயற்சித்தும், தீ வேகமாகப் பரவியதால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே 3 ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமாகின. மேலும், 2 பேருந்துகள் லேசான சேதமடைந்துள்ளன. துரித நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!