Tamilnadu
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 5,980 பேர் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை!
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,980 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 80 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி 6,420 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 73,547 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 41,36,490 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் இன்று மட்டும் 5,603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,13,280 ஆக உள்ளது. தற்போது 53,710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கை அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாகவும், கொரோனா பேரிடலும் ஊழல் செய்யும் அரசாக அ.தி.மு.க அரசு உள்ளது என பலரும் விமர்சித்துள்ளனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!