Tamilnadu
ஊரடங்கில் தலைத்தூக்கும் சூதாட்டம்.. சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட 28 பேர் கைது!
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள கற்பகம் அவென்யூவில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பட்டினப்பாக்கம் போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலிஸார் இரு தினங்களுக்கு முன்பு இரவு அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 28 நபர்கள் சேர்ந்து சுமார் 9.55 லட்ச ரூபாய் பணம் வைத்து சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 28 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டர்.
விசாரணையில் 26 பேரில் செங்கல்பட்டு மாவட்டம் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரும் மாதவரத்தை சேர்ந்த அ.தி.மு.க அம்மா பேரவை நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதில் மகேந்திரன் மற்றும் கோபி என்ற இரண்டு நபர்கள்தான் இந்த சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் என தெரியவந்ததால் இவர்கள் இருவரையும் போலிஸார் கைது செய்தனர்.
மீதம் உள்ள 26 நபர்கள் மீதும் சூதாட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்நிலைய ஜாமினில் விடுதலை செய்தனர். ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அ.தி.மு.க நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுப்பட்டது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!