Tamilnadu
முருகனும், நளினியும் அமெரிக்க தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என்னதான் பிரச்னை? -அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் இருவரும் பேச போகிறார்களே தவிர அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா பேச போகிறார்கள் என அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு வரை மட்டுமே அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!