Tamilnadu
“இடைத்தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
கொரோனா மற்றும் மழை வெள்ளம் காரணமாக செப்டம்பர் 7-ம் தேதி வரை காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது. இந்நிலையில், தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அறிவிப்புகளினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசியதாவது, இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனாலும் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளைத் துவங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
செப்டம்பர் 7ம் தேதிக்குப் பிறகு எப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலை மாநகராட்சியே வழங்கலாம். அப்படி இல்லையென்றால் வழக்கம்போல் Form 7 பூர்த்தி செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிக்கொள்ளலாம் என்றார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!