Tamilnadu
“இழிவான வகையில் பொய்ச் செய்தி பரப்பும் அ.தி.மு.கவினரை கைது செய்க” - தி.மு.க வலியுறுத்தல்!
நா.கார்த்திக் எம்.எல்.ஏ பற்றி அரசியல் நாகரீகமின்றி அ.தி.மு.க-வினர் பரப்பும் போலிச் செய்திகளைக் கண்டித்து கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், “அ.தி.மு.கவினர் விரக்தியின் உச்சகட்டமாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ அவர்களைப் பற்றி அரசியல் நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல் மிகவும் கேவலமான பொய்ச் செய்திகளை மக்கள் மத்தியில் பரப்ப முற்பட்டுள்ளனர்.
நாமறிந்த வரையில் இதுவரை இப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை வெளியிடும் அ.தி.மு.கவினரை பார்த்ததில்லை.
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவர்களின் சகாக்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அவர்கள் பெற இருக்கும் ஒட்டுமொத்த தோல்வியின் பயத்தால் இம்மாதிரியான வெட்கித் தலைகுனியும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
நேற்று 14-07-2020 தேதியன்று முகநூல் வாயிலாக அ.தி.மு.கவின் தொழில் நுட்ப அணி நிர்வாகி ரியோஸ் கான் என்பவர் தன்னுடைய புகைப்படத்தையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர்களின் புகைப்படத்தையும் இணைத்து படிப்போர் மனம் கூசும் வார்த்தைகளில் தன்னுடைய இழிவு புத்தியை பட்டவர்த்தன மாக்கியுள்ளனர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது சகாக்களின் இந்த இட்டுக்கட்டப்பட்ட இழிசெயலும் அவர்களது தரங்கெட்டதனமும் பொதுமக்கள் அவர்கள் மீது காறி உமிழச் செய்துள்ளது.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தம்பிகள் இதற்கெல்லாம் பயந்து பின்வாங்கி விட மாட்டார்கள் என்பதை அ.தி.மு.கவினருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழக காவல்துறை உடனடியாக இச்செயலுக்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?