Tamilnadu
இன்று மட்டும் 4,280 பேருக்கு கொரோனா: 65 பேர் பலி- சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொற்று தீவிரம்!
தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,180 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 100 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டுமே இன்று 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,538-ஆக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களிலும் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக இன்று மதுரையில் 352 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 251 பேருக்கும், செங்கல்பட்டில் 215 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 36,164 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 884 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று மட்டும் 2,214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 60,592 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 65 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழப்பு 1,450 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!