Tamilnadu

இன்றும் 2,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு... 49 பேர் பலி - பரிசோதனைகளை அதிகரிக்காத தமிழக அரசு! #Corona

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதுவரை தமிழகத்தில் மொத்த பாதிப்பு 52,334 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,373 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுக்க இன்று 25,719 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 7,63,506 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 40 பேர், செங்கல்பட்டில் 5 பேர், திருவண்ணாமலை, கடலூர், விக்கிரவாண்டி, திருவள்ளூரில் தலா ஒருவர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் 1,017 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Also Read: “கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படாததற்கு காரணம் என்ன?”- அ.தி.மு.க அரசிடம் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!