Tamilnadu

“காலையிலும் மாலையிலும் டெஸ்ட்... காய்ச்சல் இருக்கும் மாணவர்களுக்கு துணைத் தேர்வு” - அரசு அறிவிப்பு! #Exam

கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி பொதுத் தேர்வுகளை நடத்த முயன்று வருகிறது அ.தி.மு.க அரசு.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 தேர்வு வருகிற 16-ந்தேதியும், மார்ச் 24-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுத இயலாதவர்களுக்கு 18-ந்தேதியும் நடக்கின்றன.

கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும்.

பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்பபடுவர்.

வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத்தேர்வில் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம்.

காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.

என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா காலத்தில் கூட ஊழல் நிறைந்த நீட் தேர்வு தேவையா?” - மோடி அரசுக்கு கி.வீரமணி கேள்வி!