Tamilnadu
“தனியார் மருத்துவமனை ஒரு நாளைக்கு ரூ.23,000 முதல் ரூ.43,000 வரை வசூலிக்கலாம்” : அரசுக்கு IMA பரிந்துரை!
கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கபட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடுதிரும்பும் போது நடந்தப்படும் சோதனை வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில் நிர்ணயிக்கப்பட்ட அதிக கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் நோயாளிகளை பாதியிலேயே வீட்டிற்கு அனுப்பும் கொடூரம் நடந்துவருகிறது. ஒரு பேரிடர் காலத்தில் பணம் இல்லை என்பதற்காக கொள்ளை நோயிக்கு ஆளான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது மனித உரிமைகளுகு அரசியல் சாசனத்திற்கும் எதிரானது.
பேரிடர் காலத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிக்காட்டுதலை தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலன தனியார் மருத்துவமனைக்கள் பின்பற்றவில்லை என்பது சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மற்ற மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்கள் தொடர்பாக வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கட்டணங்களை வரைமுறையை தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு நிர்யிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக கூறிய வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ தமிழப்பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
அதில், லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்தரை செய்துள்ளது. அதனைபோல், லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.4,31,411 வசூலிக்க பரிந்தரை செய்துள்ளது.
லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.23,000 வரை வசூலிக்கவும், அதிக பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.43,000 வசூலிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை வசூலிக்கலாம் என்றும் இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்தரை செய்துள்ளது. இருப்பினும் ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “ஐ. எம்.ஏ அறிவித்துள்ளது படி, 17 நாள் சிகிச்சைக்கு 4.5 லட்சம் ஆகும். இதில் உணவுக் கட்டணம் ஒரு நாளைக்கு 10,000 எனில் 17 நாளைக்கு.1.7 லட்சம் ஆகிறது. அறைக் கட்டணம், ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்கள் இதெல்லாம் சிகிச்சைக் கட்டணத்தில் வராது. இதை மருத்துவமனையே முடிவு செய்யும். ஆக மொத்தக் கட்டணமாக சுமார் 8 முதல் 9 லட்சம் வரை நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கப்படும். இது பரிந்துரை தான். நடைமுறையில் இன்னும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!