Tamilnadu
இன்று மட்டும் 3 பேர் பலி... 536 பேருக்கு கொரோனா பாதிப்பு.. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 234 பேர்! #CoronaUpdate
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :
தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். இன்றைய பாதிப்பில் 304 ஆண்களும், 232 பெண்களும் உள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 234 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4406 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?