Tamilnadu
தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு : இன்று மட்டும் 434 பேருக்கு கொரோனா தொற்று! #CoronaUpdates
தமிழகத்தில் இன்று புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில்களில் மூலமாக வந்தவர்களில் கொரோனா தொற்று கொண்டவர்கள் குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 49 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 309 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,947-ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரேநாளில் சென்னையில் 4 பேர், தூத்துக்குடியில் ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 11,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 359 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,435 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
கட்டடக் கலையைப் போற்றும் திராவிட மாடல் அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கலை உள்ளம்!
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!