Corona Virus

இன்று 2 பேர் பலி... 447 பேருக்கு பாதிப்பு - சென்னையில் மட்டும் 5,625 பேருக்கு கொரோனா! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. தலைநகரான சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2 பேர் பலி... 447 பேருக்கு பாதிப்பு - சென்னையில் மட்டும் 5,625 பேருக்கு கொரோனா! #CoronaUpdates

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் கொரோனாவால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து 64 பேர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories