Tamilnadu
சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சென்னையில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேனி விடுதியில் தங்கிருந்து தனியார் நாளிதழின் மருத்துவ பிரிவில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
தற்போது அவர் தங்கிருந்த விடுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. செய்தியாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், தனியார் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணிபுரியும் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் தந்தை சென்னை கடற்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார்.
இவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பத்திரிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!