Tamilnadu

குடும்ப அட்டையில்லாத தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கக் கோரி வழக்கு : தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில், உணவு தானியங்களை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அருள் அரசு என்பவர் உயர்நீ்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், குடும்ப அட்டை இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின்படி யாருக்கும் இவர்கள் வழங்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் அனைத்து பொருள்களும் வழங்கிய பிறகு ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கச் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Also Read: கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 கோடி வழங்கிய ராகவா லாரன்ஸ்... இன்னொரு முக்கிய அறிவிப்பு! #Covid19