Tamilnadu
கொரோனா தொற்று தீவிரம் : பணிக்கு அழைக்கப்பட்ட புலனாய்வுத் துறையினர்! #CoronaLockDown
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது பாதிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,946 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த போலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு - பகல் பாராமல் ஒய்வின்றி தொடர்ந்து பணியிலுள்ள போலிஸார், வீட்டுக்குச் சென்றாலும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் கொடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர் பணியில் ஈடுபட்டுள்ள போலிஸார் சுழற்சி முறையில் ஓய்வெடுக்கும் வகையில் எண்ணிக்கையை அதிகரிக்க காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதற்காக ரயில்வே இருப்புப் பாதை, உணவுக் கடத்தல் தடுப்பு, சிபிசிஐடி உட்பட பல்வேறு புலனாய்வுப் பிரிவுகளில் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரியும் எண்ணிக்கையில் 3-ல் ஒரு பகுதி போலிஸார் கொரோனா தடுப்பு பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!
-
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா! : மும்முரமாக நடைபெறும் பணிகள்!
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
தமிழ்நாடு முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 6,78,034 பேர் பயன்!” : அமைச்சர் மா.சு தகவல்!
-
“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!