Tamilnadu
“கொரோனா சிகிச்சைக்காக மக்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை மையம் திறப்பு” : தி.மு.க மருத்துவ அணி அறிவிப்பு!
நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உள்ளிட்டவையால் பெரும்பால மக்கள் அவதி அடைக்கின்றனர்.
மக்களின் இந்த சூழலைப் புரிந்துக்கொண்டு தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டனி கட்சிகள், ஜனநாயக அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிதியுதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தி.மு.க மாநில மருத்துவ அணி சார்பில் இணையதளம் வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனை சேவை வழங்கவுள்ளதாக தி.மு.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா கிருமித் தாக்குதலால் உலகமெங்கும் மக்கள் கலக்கத்துடனும் குழப்பமான சூழ்நிலையிலும் உள்ளனர்.
தமிழக மக்களின் குறைகளை, தி.மு.க. மருத்துவ அணியில் உள்ள பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கேட்டறிந்து - தகுந்த ஆலோசனைகளும், தேவையான மருத்துவ உதவியும் வழங்கிட உள்ளார்கள்.
மக்கள் இச்சேவை தங்களுக்கு விரைந்து கிடைத்திட, கைபேசியில் நேரடியாக, whatsapp காணொலி, குறுஞ்செய்திகள் வாயிலாக கீழ்க்கண்ட மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
73737 38526,
73737 38516
தி.மு.க. மருத்துவ அணியில் உள்ள மருத்துவர்கள் மட்டுமல்லாமல், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் மருத்துவர்கள் மொத்தம் 70 பேர், இப்பணியில் தன்னார்வத்துடன் தங்கள் சேவைகளை, மக்கள் நலன் காத்திட வழங்கிடத் தயாராக உள்ளார்கள்.
24 மணி நேரமும் இயங்கும் மக்களுக்கான இத்தகைய சேவையைச் செயல்படுத்திட எங்களுக்கு வழிகாட்டிய கழகத்தலைவர் அவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் உளமார்நத நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்திள்ளார். தி.மு.க. மருத்துவ அணியின் இத்தகைய முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!