Tamilnadu

கொரோனா பாதிப்பு: "கூலி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை; வியாபாரிகளுக்கு tax holiday” - துரைமுருகன் கோரிக்கை!

''கொரோனாவால் இந்திய மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். கொரோனாவால் வருமானம் இழந்த கூலி வேலை செய்பவர்களுக்கு அரசு உதவித் தொகை தர வேண்டும். வியாபாரிகளுக்கு 6 மாதங்களுக்கு அரசு tax holiday அறிவிக்க வேண்டும்'' என சட்டமன்றத்தில் தி.மு.க எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஓட்டல், சினிமா, கல்வி நிறுவனங்கள், சிறு கடைகள் மூடப்பட்டன.

மூடப்படாத இடங்கள் சட்டப்பேரவையும் , டாஸ்மாக் கடைகளு மட்டுமே. லட்சக்கணக்கான முட்டை வீணாகி உள்ளது. சாலைகள் கோயில்கள் காலியாக உள்ளன.

நேற்று செய்திகளில் ஒரு அம்மா அழுதுகொண்டு 'வேலை இல்லை கூலி கிடையாது' என பேட்டி கொடுத்துள்ளார். கூலி வேலை செய்பவர்களுக்கு வருமானம் இல்லாமல் பொருளாதார பாதிப்பு அடைந்துள்ளார்கள். எனவே கூலி வேலை செய்பவர்களுக்கு 500 ரூபாய் தர அரசு முன்வர வேண்டும்.

அதேபோல் சிறு - குறு வியாபாரிகள் 31ம் தேதி வரை கடைகளை மூடியுள்ளதால் வருமானம் இல்லை. இந்தச் சூழலில் மார்ச் 31 தேதிக்குள் ஜி.ஸ்.டி வரி கட்டவேண்டும். எனவே அரசு அவர்களுக்கு 6 மாதம் tax holiday அளிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

Also Read: #LIVEUpdate | கொரோனா : பொருளாதார, சுகாதார இழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? : மு.க.ஸ்டாலின் கேள்வி!