Tamilnadu
“எப்போதுதான் திருந்துவீர்கள்?” - சட்டவிரோத பேனர் வைத்து மக்களின் உயிரோடு விளையாடும் அ.தி.மு.கவினர்!
சென்னை பள்ளிக்கரணையில், அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், தனது இல்ல திருமணத்திற்காக சாலை நடுவே வைத்த, பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார்.
இதையடுத்து, சாலையில் பேனர், அலங்கார வளைவுகள் அமைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத பேனர்கள் அமைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது.
தொடர்ந்து, கோவையில், அ.தி.மு.க கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ராஜேஸ்வரி எனும் பெண்ணின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.கவினரின் விளம்பர மோகத்தால் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் போக்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மாநிலங்களவை எம்.பி.,யும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா, நாளை (பிப்ரவரி 26) தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இந்தத் திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக, திருச்சி - தஞ்சாவூர் சாலையின் நடுவே குழி தோண்டி, அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து அதிகமுள்ள சாலையில், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேனர் சரிந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் ஆளுங்கட்சியினர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!