தமிழ்நாடு

பேனர் விவகாரம் : சுபஸ்ரீ மரணத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்ட வழக்கு : தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

சுபஸ்ரீ உயிரிழப்புக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேனர் விவகாரம் : சுபஸ்ரீ மரணத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்ட வழக்கு : தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபாலின் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பேனர் விவகாரம் : சுபஸ்ரீ மரணத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்ட வழக்கு : தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

அப்போது, காவல் துறை தரப்பில், சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், பள்ளிக்கரணையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ மரண வழக்கின் விசாரணை முடிவு குறித்த இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்த நீதிபதிகள், விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, சுபஸ்ரீயின் மரணத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியது தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என சுபஸ்ரீயின் தந்தை ரவிக்கு அறிவுத்திய நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories