Tamilnadu
தமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஆணை!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.
இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை, சில தொழிற்சங்கங்கள், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மின்துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் மனுவை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரரின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!