Tamilnadu
கேங்மேன் பணிக்கான நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் : தமிழ்நாடு மின்துறையின் முறைகேடு அம்பலம்!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5,000 கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.
இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கிக் கொண்டு ஓடுதல் போன்ற உடல் தகுதி தேர்வில், தோல்வி அடைந்த பலரை சில தொழிற்சங்கங்கள் பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்கியதாக கூறப்படுகிறது.
கேங்மேன் பதவிக்கு இவ்வாறு தேர்தெடுக்கப்பட்டவர்கள் 80% பேர் தகுதியில்லாதவர்களாக இருப்பதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே கேங்மேன் பணிக்காக ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால் தொடர்புடைய மின்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அடுத்தகட்ட விசாரணையை வருகிற 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!