Tamilnadu
தமிழகத்தை அழிக்கக் கூடிய திட்டங்களையே மோடி அரசு கொண்டு வருவது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி!
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தி.மு.க நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடர்ந்து மக்கள் வலுவாக எதிர்த்து வருகின்றனர். எல்லா எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட மக்களுடைய கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடிய அவசியமில்லை, சுற்றுச் சூழலைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்ற ஒரு முடிவை எடுத்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
விவசாயிகளை, விவசாயத்தை முற்றிலுமாக தமிழ்நாட்டில் அழித்துவிடக் கூடிய திட்டங்களை ஏன் மத்திய அரசு தொடர்ந்து கொண்டுவருகிறது என்பது புரியவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கிறோம்.”
தொடர்ந்து பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் சிலையை பராமரிக்கக் கூடாது என்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சிலையை பராமரிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை, கண்டன கூட்டம் நடத்தி எடுத்துக் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. இந்த ஆட்சியில், விவேகானந்தர் மீது இருக்கக் கூடிய அக்கறையை, தமிழர்களுக்கு மிக முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததாக உள்ளது.
நாட்டையே தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் மோடி அரசு தனியார் வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கானோர் வேலை செய்யக்கூடிய ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் ரயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையே உருவாகும்” என கனிமொழி தெரிவித்தார்.
Also Read
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பீகார் : 121 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல் - பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள்!
-
தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
-
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!