Tamilnadu
“ஒன்றிய தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்” - தி.மு.க கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது. இதுதவிர, மறைமுகத் தேர்தலில் பதவிகளைக் கைப்பற்றவும் பல்வேறு கடத்தல், விலைக்கு வாங்குதல் போன்ற தரங்கெட்ட நடவடிக்கைகளிலும் அ.தி.மு.கவினர் இறங்கினர்.
அ.தி.மு.க-வின் அதிகார வெறியாலும், ஆதிக்க பலத்தாலும் பல இடங்களில் மறைமுகத் தேர்தல்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் தேர்தலில் தி.மு.க வென்றாலும், அ.தி.மு.க-வினரின் வன்முறையால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கோரி இன்று காலை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வத்திராயிருப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க கூட்டணி 6 இடங்களையும், அ.தி.மு.க கூட்டணி 6 இடங்களையும், சுயேட்சை ஓரிடத்தையும் வென்றனர்.
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க 7 கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்றது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த அ.தி.மு.க குண்டர்கள் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடியதால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளை உடனே அறிவிக்கக்கோரி வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் பகுதியில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று வருவாய் துறை அதிகாரிகளிடம் மறைமுக தேர்தல் அறிவிப்பு குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!