Tamilnadu
திருச்சி ஸ்மார்ட் கழிவறையில் பாரதியார் உருவப்படம்? - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு கிராமங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஸ்மார்ட் டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அவ்வப்போது பல்வேறு குளறுபடிகள் எழுந்து அவற்றில் பல சமூக வலைதளத்தில் நகைப்புக்கு உரியதாகியும் வருகின்றன.
இருப்பினும், சில ஸ்மார்ட் சிட்டி திட்டச் செயல்பாடுகள் மக்களை முகம் சுழிக்க வைப்பதும் நிகழ்கின்றன. அந்தவகையில், திருச்சியில் உள்ள கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கழிவறை நேற்று தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட் டாய்லெட்டில் சி.சி.டி.வி, சுத்தம் செய்வதற்கு தானியங்கி கருவி, ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை தெரியப்படுத்துவதற்கு சென்சார் என அனைத்தும் பொருத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட் கழிவறையால் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதில், ஆண்கள் கழிவறை உள்ள பகுதியின் வாயிலில் மகாகவி பாரதியாரின் உருவ அடையாளம் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அதன் கீழ் பெயர் பொறிக்கப்பட்ட பலகை ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மக்களிடையே பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக ஆர்வலர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த பாரதியாரின் அடையாளம் மறைந்த எழுத்தாளர் ஞானி உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரப் போராட்ட உணர்வை தன்னுடைய எழுத்தால் ஏற்படுத்திய மகாகவி பாரதியாரை இழிவுபடுத்தும் வகையில் கழிவறை வாயிலில் அவரது அடையாளத்தைக் குறிப்பிடும் படத்தை வைத்திருப்பதற்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.
அதனையடுத்து, ஸ்மார்ட் டாய்லெட்டில் பாரதியார் உருவம் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை நீக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இழிவான செயலைச் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Also Read
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!