தமிழ்நாடு

கழிப்பிட சுவரில் வரையப்பட்ட திருவள்ளுவரின் ஓவியம் : குன்னூரில் பரபரப்பு!

திருவள்ளுவரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கும் சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்பு நீலகிரியில் உள்ள கழிப்பிடத்தில் திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிப்பிட சுவரில் வரையப்பட்ட திருவள்ளுவரின் ஓவியம் : குன்னூரில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

20 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பிள்ளையார்பட்டி பிரதான சாலையில் இருந்து வரும் திருவள்ளுவர் சிலை மீது கடந்த 4ம் தேதி மர்ம நபர்கள் சிலர் சாணம் வீசிய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வலுத்தன.

முன்னதாக, திருவள்ளுவருக்கு சாதி, மத அடையாளங்களை பூசும் வகையில் தமிழக பா.ஜ.க-வின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்துத்வா கும்பல் திருவள்ளுவர் சிலைக்கு காவி அடையாளம் பூசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

கழிப்பிட சுவரில் வரையப்பட்ட திருவள்ளுவரின் ஓவியம் : குன்னூரில் பரபரப்பு!

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ரயில் நிலையத்தில் புதிதாக கழிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் சுவற்றில் தமிழக கலாசார ஓவியங்களை வரையும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கழிப்பிட சுவரில், திருவள்ளுவரின் உருவத்தை ஓவியமாக வரைந்திருந்தது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கழிப்பிட சுவரில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவரின் ஓவியம் அழிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories