Tamilnadu

உள்ளாட்சித் தேர்தல்: அ.தி.மு.கவின் சதியை முறியடித்து தி.மு.க. தொடர்ந்து வெற்றி முகம்!

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இதுகாறும் நீடித்து வருகிறது.

இதில் ஆரம்பத்திலிருந்தே திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். மொத்தம் 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் 249 இடங்களில் திமுக முன்னிலை வகித்தும் அதில் 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

அதேபோல, யூனியன் கவுன்சிலர்களுக்கான 5067 இடங்களில் 2043 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்தும் அதில் 1720 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

இருப்பினும், பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினரின் அத்துமீறல்கள் மற்றும் முறைகேடுகளால் திமுகவின் வெற்றி உறுதியான போதும் அதனை அறிவிக்கவிடாமல் தடுத்து வருகின்றனர்.

அதிகார துஷ்பிரயோகம் செய்தும் கூட அதிமுக மாவட்ட கவுன்சிலர் போட்டியில் 71 இடங்களிலும், ஒன்றிய கவுன்சிலரில் 1348 இடங்களில் மட்டுமே வெற்றியைக் கண்டுள்ளது.