Tamilnadu

உங்கள் பகுதியின் வேட்பாளர் யார்? தெரிந்துகொள்ள...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலின் மூலம் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதன்படி, தேர்தலில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த டிசம்பர் 17ம் தேதி நடந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான டிசம்பர் 19 அன்று பலரும் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டது. அதன்படி, 27 மாவட்டங்களில் உள்ள 91,975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

மேலும் 18,570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 898 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35,611 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 22,776 பேரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 2,605 வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர்.

இறுதியாக களத்தில் உள்ள வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மாவட்ட வாரியாக உள்ள பட்டியலில் தேவையான் பதவியை தேர்ந்தெடுத்து வேட்பாளர் பட்டியலை பார்க்கலாம்.

வேட்பாளர் பட்டியலை காண இங்கே க்ளிக் செய்யலாம்...