Tamilnadu
"காரில் சென்றவர் மாயம்” - புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணவில்லை என புகார்!
பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதியரின் மகள் காணாமல் போனதாக போலிஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி மருத்துவராகப் பணியாற்றுகிறார். இந்நிலையில் இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் டாக்டர் பல்லவியைக் காணவில்லை புகார் கொடுத்துள்ளார்.
அதில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவிக்கும் அவரது சகோதரிக்கும் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது. இதையடுத்து கோபத்துடன் காரை எடுத்துச் சென்ற பல்லவி பிறகு வீடு திரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்லவியின் செல்போன் ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை எனக் கூறி, போலிஸார் கண்டுபிடித்து தரவேண்டும் என்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலிஸார் காணாமல் போன டாக்டர். பல்லவியை தேடி வருகின்றனர்.
Also Read
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
-
“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
-
திருட்டு வதந்தி : பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து கொலை - உ.பி-யில் அதிர்ச்சி!
-
அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல் : பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் கைது!
-
”தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்தின் உரிமங்கள் முழுமையாக ரத்து” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!