Tamilnadu
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் சுதந்திர போராட்டமாக வெடிக்கும் - ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்கட்சிகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், தி.மு.க சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், ம.தி.மு.க சார்பில் வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார சரிவு ஆகியவற்றை திசைத்திருப்பும் விதமாக இந்த குடியுரிமை சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் போராட்டம் மற்றுமொரு சுதந்திர போராட்டமாக வெடிக்க வாய்ப்புள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் அரசே பேருந்துகளை தீயிட்டு எரித்து விட்டு போராட்டக்காரர்கள் மீது பழி போட்டுள்ளது.
இந்த விவகாரத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து பிறகு மனிதனை கடிக்கும் நிலை வந்துவிடும்.
அன்புமணி ராமதாஸ் ஒருநாள் கூட நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. பதவியேற்றதற்கு பிறகு மசோதாவுக்கு வாக்களிப்பதற்கு மட்டும் வந்தார். மனசாட்சியோடு வாக்களித்திருந்தால் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் பயனடைந்திருப்பார்கள்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயம் அதில் வெற்றி பெறுவோம்” என அவர் கூறினார்.
Also Read
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு!” : சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு!
-
பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்! - கனிமொழி கண்டனம்!