Tamilnadu
‘என்னை பாலியல் வல்லுறவு செய்து வீடியோ எடுத்தார்...’ : அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மீது இளம்பெண் புகார்!
கடலூர் முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவள்ளி (35). இவர் கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் சரவணன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். எனது உறவினரும், முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலருமான வினோத்ராஜ் என்பவர் என்னிடம் பேசி வந்தார். பின்னர் என்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்.
கடலூரில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரவழைத்து என்னை வற்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்தார். அதனை செல்போனில் படம் பிடித்தார். பின்னர் நாளடைவில் செல்போனில் உள்ள படத்தை வைத்துகொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்.
சிங்கப்பூரில் இருந்து எனது கணவர் அனுப்பிய பணம் மற்றும் பல நபர்களிடம் கடன் வாங்கி சுமார் 1 கோடி ரூபாயை என்னிடம் மிரட்டி வாங்கினார். அதோடு கடலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு கொள்ள வற்புறுத்தினார்.
தனக்கு கவுன்சிலர் பதவி கிடைப்பதற்காக கடலூரில் உள்ள முக்கிய கட்சி பிரமுகருடன் பாலியல் ரீதியாக தொடர்புகொள்ளுமாறு மிரட்டி வருகிறார்.
இது சம்பந்தமாக எனது உறவினர்களிடமும் மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்களிடமும் கூறினேன். ஆனால் வினோத்ராஜ் மதிக்கவில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதால் செல்வாக்கை பயன்படுத்தி கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் என் மீது பொய்யான புகார் கொடுத்தார். என்னை மிரட்டி வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கி கொண்டார்.
மேலும் கூலிப்படையை கொண்டு என்னையும் எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். ஆகையால் இது குறித்து முழு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும். அதோடு அவர் எடுத்த ஆபாச படங்களை அழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் வினோத்ராஜ் மீது பல்வேறு புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பெண்ணின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அ.தி.மு.க பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!