Tamilnadu
’கால்வாய் உடைந்ததற்கு எலிகளே காரணம்’ : அமைச்சர் சொன்ன அடடே விளக்கம்.. கோபத்தில் விவசாயிகள் !
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பாசனத்துக்கு பெரிதும் உதவி வருகிறது தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை.
இந்த அணையில் இருந்து மதுரை உசிலம்பட்டி, திண்டுக்கல் நிலக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் செல்ல 58ம் கால்வாய் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த கால்வாய் கட்டும் பணி அண்மையில் முடிவடைந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
விவசாயிகளின் கடுமையான போராட்டத்துக்கு பின்னர், கடந்த 5ம் தேதி 58ம் கால்வாயில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 100 கன அடி நீரும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், டி.புதூர் பகுதி அருகே 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்தன. இதனையடுத்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
கால்வாய் உடைப்பைப் பார்வையிடுவதற்காக சம்பவ இடத்துக்குச் சென்ற அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கரை உடைப்புக்கு காட்டுப்பன்றிகளும், எலிகளுமே காரணம் என்றும், அவைகள் துளையிட்டதாலேயே கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
நீர் நிலைகளை தூர்வாருவதாகக் கூறி, குடிமராமத்து என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடும் பணிகள் சேதமடைவதற்கு எலிகளும், காட்டுப்பன்றிகளுமே காரணம் என அமைச்சர் கூறியிருப்பது விவசாயிகளிடையே கொதிப்படைய வைத்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!