Tamilnadu
இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் ரூபி : சாத்தியமானது கலைஞரின் தொலைநோக்குப் பார்வை !
மருத்துவப் பணியாளர்களாக தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிசாமி மருத்துவப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதில், அன்பு ரூபி என்ற திருநங்கையும் செவிலியராக பணி நியமன ஆணையைப் பெற்றார். இந்தியச் சுகாதார வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் செவிலியராக அரசு பணியாற்றுவது இவரே ஆவார்.
பணி நியமன ஆணை பெற்ற பிறகு பேசிய அன்பு ரூபி, “இது தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார். பாலின வேறுபாட்டால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற்றும் சமூகத்தில் தன்னை தன் தாயார் கனிவுடன் வளர்த்தார் என்று பேசிய அன்பு ரூபி, தனக்கு இதுவரை எந்த பாலியல் தொந்தரவுகளும் நேர்ந்ததே இல்லை என கூறியுள்ளார்.
இருப்பினும், பொது வெளியில் மற்ற திருநங்கைகளுக்கு நிகழ்வது போல தானும் வார்த்தை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அதனால் பல மனவலிகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு ஏற்பட்ட பாலின மாற்றங்களை குறித்து முழுவதும் தெரிந்துகொண்டு அதனை இந்த சமூகத்துக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்” என குறிப்பிட்டுள்ளார்.
அரவாணிகள் என்று அழைக்கப்பட்டவர்களை சமூகத்தில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு திருநங்கை என்கிற பெயர் கொடுத்து, கல்வி கற்க வழி ஏற்படுத்தினார் தலைவர் கலைஞர். அவரின் கனவின் வழி இன்று தனது கனவை நிஜமாக்கி இருக்கும் திருநங்கை ரூபிக்கு நாடு முழுவதில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!