Tamilnadu
அதிர வைக்கும் தொடர் பாலியல் வன்கொடுமைகள் : கோவையில் 16 வயது மாணவியை சீரழித்த 6 கொடூரன்கள் !
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹைதராபாத்தில் டாக்டர் ஒருவரை லாரி டிரைவர்கள் நான்கு பேர் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கோவை சீரநாயக்கன் பாளையத்தில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைப் போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த நவ.,26ம் தேதி தன் ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஐஸ்வர்யா நகரில் உள்ள சிறுவர் பூங்காவிற்குச் சென்ற 11ம் வகுப்பு மாணவியை அங்கிருந்த மணிகண்டன் என்கிற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்ததும், அதற்கு உடந்தையாக கார்த்திகேயன், நாராயணமூர்த்தி, ராகுல், பிரகாஷ் ஆகிய 4 பேரை RS புரம் மகளிர் காவல் நிலைய போலிஸார் போக்ஸோ, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர்.
மேலும், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் மற்றொரு நபரை தனிப்படை அமைத்து தீவிரமாக போலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பாலியல் வழக்கில் குற்றவாளியான மணிகண்டன் மீது ஏற்கெனவே கொலை வழக்கு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். போலிஸ் வேலைக்காக முயற்சித்த மணிகண்டனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பணி கிடைத்துள்ளது.
ஆனால், வேலையில் சேர்வதற்கு முந்தைய நாள் மணிகண்டனை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியதால் ஆத்திரத்தில் அந்த நபரை கொன்று விட்டதால் போலிஸ் வேலையில் சேர முடியாமல் போனதாக கூறுகின்றனர். அவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!