Tamilnadu
”நீங்க எல்லாம் ஆம்பளையா?": தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்தை அசிங்கப்படுத்திய ஆடிட்டர் குருமூர்த்தி!
அ.தி.மு.க ஆட்சி குறித்தும், அக்கட்சித் தலைவர்கள் குறித்தும் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாகி வருகின்றன. அ.தி.மு.க ஆட்சியாளர்களை திறனற்றவர்கள் என்ற பொருளில் ‘Impotent' என அவர் கூற அதற்கு அ.தி.மு.க-வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், நேற்று இரவு திருச்சியில் துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய 'துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
குருமூர்த்தி பேசும்போது, “சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கான பணிகள் நடைபெற்றபோது ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் வந்தார். 'நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க?' என்று கேட்டேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார்.
அதன்பிறகுதான் தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்த அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்தேன். எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை” எனத் தெரிவித்தார்.
ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை குருமூர்த்தி தரக்குறைவாக பேசியது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Also Read
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!